கேரள நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும், இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டத்தில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இதனிடையே ராஜமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள்.
இங்கு இருந்த 20 வீடுகளில் 80-க்கு மேற்பட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி, கேரளாவின் மூணாறு பகுதியில் தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மதுரையில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மீட்பு பணிகளுக்கு தேவையான உதவியை வழங்க தமிழகம் தயார் நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. முதலில் பேட்டிங்…
சென்னை : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் தொடர்ந்து 5வது முறையாக தோல்வியை தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ். 8…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை…
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…