முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேட்டி அளித்த போது பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பரபரப்புக்கு மத்தியில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் பத்திரிகை துறையில் வேலை பார்க்கும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.
இதனால், எஸ்.வி. சேகருக்கு எதிராக கண்டங்கள் எழுந்தது. பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் எஸ்.வி. சேகர் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இன்று இந்த வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வந்தபோதும் எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். காவல்துறை சார்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…