தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்கத் தயார்- தமிழக அரசு அறிவிப்பு

Default Image

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்கத் தயார் என்று  தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவத்தொடங்கிய நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.கொரோனா முன்னெச்சரிக்கையாக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டதால் இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் முடிவு செய்தது.மேலும் சமூக இடைவெளி மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த ஊரடங்கு  காரணமாக வெளியூர்கள் ,வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.

ஒரு சில மாநிலங்களில் தொழிலாளர்கள் நடைபயணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு மேற்கொண்டனர். எனவே இவர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால் அந்த ரயிலில் பயணம் மேற்கொள்ள கட்டணம் செலுத்துவது அவசியம் ஆகும்.இந்த வேளையில் பல்வேறு தொழிலாளர்கள் பணம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் ரயில் கட்டணத்தை செலுத்த முடியாத பட்சத்தில் அதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளது .மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்