ரெடியா…10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் ஹால் டிக்கெட்!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பிற்கு மே 6 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும்,11 ஆம் வகுப்பிற்கு மே 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையிலும்,12 ஆம் வகுப்பிற்கு மே 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று பிற்பகல் இரண்டு மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி,அரசு தேர்வுகள் இயக்கத்தின் https://www.dge.tn.gov.in/என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் தனித்தனி உயர் அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே,10 ஆம் பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை நேற்று முன்தினம் (20 ஏப்ரல்) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.