உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது!
சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு உடனடி அபராதம் விதிக்க வகைசெய்யும் அரசாணையை திரும்பப் பெறக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தை காவல் அதிகாரி எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்ததை மேற்கோள் காட்டி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
உடனடி அபராதம் விதிக்க எந்த சட்டமும் இல்லை என்றும், சட்டப்படி நோட்டீஸ் கொடுத்து பதிலளிக்காவிட்டால் வழக்கு தொடரலாமே தவிர தன் தரப்பு நியாயத்தை நிரூபிக்க வாய்ப்பளிக்காமல் உடனடி அபராதம் விதிப்பது சட்டவிரோதம் என்றும் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் உடனடி அபராதம் விதிக்கும் அரசாணையை திரும்பப் பெற முடியாது என்று கூறி தள்ளுபடி செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.