தமிழில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை.! இன்று மசோதா தாக்கல்.?
தமிழக சட்டசபை கடந்த 09-தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து 11-ம் தேதி வரை துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது.இந்த விவாதத்தில் சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி ,எரிசக்தி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறைகள் மீதான கோரிக்கைகள் விவாதம் நடந்து முடிந்தது.
இதையடுத்து சனி , ஞாயிறு ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை என்பதால் சட்டசபை நடைபெறவில்லை இதையடுத்து இன்று திங்கள்கிழமை மீண்டும் சட்டசபை கூடுகிறது.
இன்றைய தினத்தில் அரசு பணியிடங்களில் தமிழ் வழியில் பட்டப்படிப்பு படித்தோருக்கு 20% இடஒதுக்கீடு தரப்படுகிறது. இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10 , 12 வகுப்புகளில் படித்து இருந்தால் அரசு பணியிடங்களில் முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது.
இதற்கானை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்ததுறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.