மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி – தமிழக அரசு ஆலோசனை!

Published by
பாலா கலியமூர்த்தி

வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் தகவல் கூறியுள்ளார். வேலை இழந்துள்ள மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலினை செய்து வருவதாக உச்சதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜேதீப் குப்தா தெரிவித்துள்ளார்.

மக்கள் நலப்பணியாளர்கள் சுமார் 13 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் அதை தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது 13,500 மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்குகள் பல ஆண்டு காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

தற்போது தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது பிறகு, கடந்த 3 மாதங்களில் இந்த வழக்குகள் மூன்று முறை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது,  மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறுகையில், மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. ஆனால் இதனை விரைவில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!

“அதுக்கெல்லாம் இப்போ பதில் சொல்ல முடியாது!” கடுப்பான ரோஹித் சர்மா!

நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…

30 minutes ago

2வது டெஸ்ட் போட்டி… டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு.! தொடரை கைப்பற்றுமா ஆஸ்திரேலியா அணி?

காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…

41 minutes ago

LIVE : நெல்லையில் முதலமைச்சர் கள ஆய்வு முதல் ‘விடாமுயற்சி’ திரைப்படம் ரிலீஸ் வரை.!

சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…

1 hour ago

விடிய விடிய கொண்டாட்டம்… உலகம் முழுவதும் வெளியானது ‘விடாமுயற்சி’ திரைப்படம்.!

சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…

1 hour ago

ஒரு பக்கம் ‘விடாமுயற்சி’.. மறுபக்கம் கார் ரேஸ்.! கலக்கும் அஜித்குமார்.!

சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…

2 hours ago

பல்வேறு திட்டங்களை திறந்து வைக்க இன்று நெல்லை செல்கிறார் மு.க.ஸ்டாலின்.!

நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…

4 hours ago