மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி? – தமிழக அரசு ஆலோசனை!
மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக தமிழக அரசு தகவல்.
அதிமுக ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப்பணியாளர் பிரச்சனை குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளது. மக்கள் நலப்பணியாளர்கள் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்போவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொள்கை முடிவு தொடர்பாக ஆலோசனைகளுக்கு நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பனி வழங்குவது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்போவதாக தகவல் கூறப்படுகிறது.