சின்னம் மாறி அச்சிடப்பட்டதால் 3 ஊராட்சிகளில் 30ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!
- புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளில் வார்டுஒன்றிய குழு உறுப்பினர் போட்டிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட சேகர் என்பவரது சின்னம் மாறி இருந்தது.
- இதனால், வரும் 30ஆம் தேதி 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் நேற்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணி முதல் நடைபெற்ற தேர்தல் மாலை 5 மணி சில இடங்களில் டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்தும் வாக்களித்தனர். இந்த தேர்தலில் சில வாக்குச்சாவடியில் பிரச்னை ஏற்பட்டு பரபரப்பானது.
இதில் புதுக்கோட்டை மாவட்டம் விரலைமலை பகுதிக்கு உட்பட்ட 3 ஊராட்சிகளான கோங்குடிபட்ட, பாக்குடி, பேரம்பூர் உட்பட்ட பகுதியில், 15வது வார்டு ஒன்றியம் குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட சுயேட்ச்சை வேட்பாளர் சேகர் என்பவருக்கு ஸ்பேனர் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால் வாக்குசீட்டில் அவரது பெயருக்கு அருகே ஸ்க்ரூ சின்னம் தவறுதலாக அச்சிடப்பட்டது.
இதனால் சேகர், தேர்தல் அதிகாரிகளுடன் புகார் செய்திருந்தார். இதனை அடுத்து, சேகர் போட்டியிட்ட அந்த 3 ஊராட்சிகளில் உள்ள 13 வாக்குசாவடிகளில் வரும் 30 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டது.