மீண்டும் முறையீடு.. உடல் மறு கூராய்வை நிறுத்தி வைக்க முடியாது – ஐகோர்ட் திட்டவட்டம்
மறு பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என தந்தை மீண்டும் முறையீடு.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டு நீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து, மாணவி மறு உடல் கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்திருந்தது. கிரிமினல் விவகாரங்களில் தலையிட அதிகாரமில்லை என நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மாணவியின் உடலை மறு கூராய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என தந்தை ராமலிங்கம் தரப்பு முறையிட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்டது.
தனி நீதிபதி உத்தரவில் மேல்முறையீடு வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்கும் வரை உடல் மறு கூராய்வு நடத்தக்கூடாது என உயிரிழந்த மாணவியின் தந்தை மீண்டும் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இதில், உச்சநீதிமன்றத்தில் முறையிட உள்ளதால் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என தந்தை மீண்டும் முறையீடு செய்துள்ளார்.
மாணவியின் தந்தை தொடர்ந்த முறையீடு மனு மீதான விசாரணையில், மாணவியின் உடல் மறு கூராய்வுக்கு பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என நீதிபதி சதீஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே, பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது, வேண்டுமானால் சிபிசிஐடிக்கும், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு மனு அளியுங்கள் என்றும் கூறியுள்ளார்.