கார் வெடிப்பு சம்பவம் கோவை குண்டுவெடிப்பை நினைவூட்டுகிறது.! – முன்னாள் அமைச்சர் உதயகுமார் கருத்து.!
கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை.
கடந்த 23ஆம் தேதி கோவையில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசரணையை தமிழக அரசின் கோரிக்கையின் பேரில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ விசாரிக்க உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார் ஓர் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘ கோவை கார் வெடிப்பு சம்பவம் 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட கோவை குண்டுவெடிப்பை நினைவூட்டுகிறது.’ என குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில் , ‘ இந்த சம்பவம் தமிழகத்தில் பயங்கரவாதம் வேரூன்ற ஆரம்பித்து இருக்கிறதோ என அச்சத்தை தருகிறது. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வேடிக்கை பார்க்கும் எந்த அரசையும் தூக்கி எரியும் சக்தி மக்களிடம் உள்ளது.’ எனவும் தனது கருத்தை அந்த வீடியோவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.