அதிமுகவின் தேர்தல் அறிக்கை காப்பி பிரிண்ட் இல்லை… ஆர்பி உதயகுமார்!

RB Udhayakumar

RB Udhayakumar : திமுக தேர்தல் அறிக்கையை அதிமுக காப்பி அடித்ததாக முதலமைச்சர் முன்வைத்த விமர்சனத்துக்கு ஆர்பி உதயகுமார் மறுப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கைகளை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த சூழலில் திமுக தேர்தலை அறிக்கையை அதிமுக காப்பி பிரிண்ட் அடித்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.

முதலமைச்சர் கூறியதாவது, மத்திய பாஜகவுடன் கூட்டணியாக இருந்து சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யாமல் துரோகங்களை மட்டுமே செய்தவர் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இப்பொது அவர் பங்குக்கு ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அது தேர்தல் அறிக்கை அல்ல, எடப்பாடி பழனிசாமியின் பம்மாத்து அறிக்கை. அவர் கிட்ட அதிகாரம் இருந்தபோது மத்திய அரசிடம் இருந்து உருப்பிடியாக எதையாவது பெற்று தந்தாரா?. ஆளுநரை நியமனம் செய்யும்போது  ஆலோசனைகளை பெற்று நியமனம் செய்ய வேண்டும் என திமுக சொன்னதை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து இபிஎஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என விமர்சித்திருந்தார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது, பிரிண்டிங் செய்வதற்கு எங்களுக்கு கொஞ்சம் காலதாமதம் ஆகிடுச்சு. எந்த நீதிமன்றத்தில் வேணாலும் நாங்கள் வந்து சொல்கிறோம். 9 மண்டலத்திலும் மக்கள் கொடுத்த அந்த கோரிக்கைகளின் அடிப்படையிலேயே அதை நாங்கள் பிரதிபலித்திருக்கிறோம். இதற்கு ஆதாரம் எங்களிடம் உள்ளது. இதனால் அதிமுக தேர்தல் அறிக்கையானது காப்பி பிரிண்ட் அல்ல, அக்மார்க் ஒரிஜினல் தமிழ்நாட்டு மக்களின் பிரிண்ட் தான் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்