‘கறந்த பால் மடிபுகாது.. கருவாடு மீன் ஆகாது’ – சசிகலா குறித்த கேள்விக்கு ஆர்.பி.உதயகுமார் பளீச் பதில்

RB Udhayakumar

மதுரை : அதிமுகவை ஒன்று சேர்ப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்க தென்காசியில் நேற்று முதல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் விகே சசிகலா. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான ஆர்.பி. உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார்.

மேலும், அந்த சந்திப்பில் தென்காசியில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சசிகலாவை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளித்தார். இதனை குறித்து அவர் கூறியதாவது, “சசிகலாவின் இந்த ஆடி மாத சுற்றுப்பயணம் என்பது ஒரு சுற்றுலா பயணமாகத்தான் இருக்கும். அவரிடம் இருக்கும் வசதிக்கும் வாய்ப்புக்கும் தமிழக மக்களுக்கு அவர் எவ்வளவோ செய்திருக்கலாம்.

ஆனால், அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது தான் மக்களுக்கு செய்கிறேன் என்று சசிகலா கூறுவது தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கும் கதையாகும். இந்த செயலை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமாக தான் இதனை மக்கள் பார்க்கிறார்கள்.

அதிகாரம் அவர்கள் கையில் இருந்த போதும் காலம் அவர்களுக்கு துணையாக இருந்த போதும் ஏழை எளிய மக்களுக்கு ஒன்றுமே செய்யாமல் இப்போது வந்து மக்களுக்கு செய்யப் போகிறேன் என்று சசிகலா சொல்கிறார்.

அவர்களிடம் எப்படி அதிகாரம் இருந்தது என்பது எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாக தெரியும். அந்த அதிகாரத்தை உபயோகப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொண்டார்களே தவிர அவர்களை நம்பிய மக்களை கைவிட்டு விட்டார்கள்.

அவர்களை நம்பயிவர்களை கரம் தூக்கி விடவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. அவர்களை சார்ந்த சமுதாயத்தினரின் வாழ்வாதாரத்திற்கும் எதுவும் செய்யவில்லை. அவர்களால் பலன் பெற்றவர்கள் என்று யாராவது பட்டியலிட்டு சொன்னால் அதை விவாதிப்பதற்கும் நான் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மீண்டும் வளர வேண்டும் என்றால் ஜானகி போல் சசிகலா ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இப்போது தான் நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். சசிகலாவை இணைத்து அதற்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம்”, என்று பத்திரிகையாளர்களிடம் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
veera dheera sooran review
TVK Leader Vijay
SRH vs LGS - IPL 2025
riyan parag issue
playoffs ipl
VeeraDheeraSooran