2 ஆயிரத்து 548 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2018-2019-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார்.
இதில் ரயில்வே துறைக்கு ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 528 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2,548 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒசூர் – பெங்களூரு இடையிலான 48 கிலோ மீட்டர் தூர இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கான 376 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 20 ஆயிரத்து 64 கோடி ரூபாய் மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், அதில் 3,198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சமாக, உத்தரப்பிரதேச மாநில ரயில்வே திட்டங்களுக்கு 7,685 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…