கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள், பெரு நிறுவனங்கள் முடங்கிப்போய் உள்ளது. முறைசாரா அமைப்புகளில் வேலைசெய்துவந்த தினக்கூலி தொழிலாளார்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், மாநில முதல்வர்களும் பொதுமக்களிடம் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அரசிற்கு கொடுக்க கோரிக்கை வைத்தனர்.
இதனை தொடர்ந்து பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வந்தனர். பல திரை பிரபலங்கள், தன்னார்வலர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வந்தனர்.
இந்நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மதுரை சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ரவிச்சந்திரன் ரூ.5,000 சிறப்பு நிதி வழங்கினார். இந்த நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக ரூ.5,000-ஐ அவர் வழங்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர் ஏற்கனவே ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் அமையும் தமிழ் இருக்கைக்காக நிதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : இன்றைய சட்டப்பேரவை நிகழ்வில் மாநில சுய ஆட்சி குறித்த முக்கிய தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து…
ஹைதராபாத் : வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…
சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…