அரசு வேலை மோசடி.! முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் கைது.!
முத்துலட்சுமி என்ற பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக 11 லட்சத்தை வாங்கி ஏமாற்றியதாக ரவி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராணிப்பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒரு புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஹனிபா எனும் தரகர் , தலைமைச் செயலகத்தின் ஊழியர் ரவி என்பவரை அறிமுகம் செய்து வைத்தததாகவும்,
ரவி : தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ரவி என்பவர் தனது பல்வேறு அமைச்சர்களை தெரியும் என்று கூறி, ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகியோரிடம் 11 லட்சம் வாங்கிகொண்டு மோசடி செய்து விட்டதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் அவர்கள் மிரட்டுகிறார்கள் என்றும் முத்துலட்சுமி புகாரில் தெரிவித்து இருந்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : இந்த புகாரை அடுத்து ரவி மற்றும் ஓட்டுநர் விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ரவி என்பவர் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்து