நாளை வழக்கம்போல் ரேசன் கடைகள் இயங்கும்..!

Default Image

தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,  கடந்த சில வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடைகள் இயங்கவில்லை இதனால்,  தமிழ்நாட்டில் நாளை வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது விநியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 2022-ம் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெறுவதற்கு ஏதுவாக வரும் 30-ஆம் தேதி (ஐந்தாவது ஞாயிற்றுக்கிழமை) நியாயவிலைக்கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த பணி நாளுக்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி (நான்காம் சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது என்றும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்