பொங்கல் தொகுப்பு பெறுபவர்களே… நாளை ரேஷன் கடைகள் செயல்படும்!

அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் பொங்கல் பரிசுத் தொகுப்பை விரைந்து பெற்றுக்கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Ration Shop

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும்.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற அடிப்படையில்,  முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம்  2 கோடியே 20 லட்சத்து 94ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்பு ஆகியவற்றை வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், பொங்கல் பரிசுடன் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று சென்னை சைதாப்பேட்டை சின்ன மலையில் இயங்கும் நியாய விலைக் கடையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின், குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கி துவக்கி வைத்ததையடுத்து, அனைத்து நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைவரும் விரைந்து பெற்றிட ஏதுவாக நாளை (10.01.2025 – வெள்ளிக்கிமமை) அனைத்து நியாய விலைக் கடைகளும் வழக்கம்போல் செயல்படும் என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை இயக்குநர் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்