ரேஷன் கடைகளுக்கு இந்த 11 நாட்கள் விடுமுறை! தேதியை குறிச்சு வச்சுக்கோங்க மக்களே!
2025ஆம் ஆண்டு ரேஷன் கடைகள் மொத்தமாக 11 நாள்கள் இயங்காது அது என்னனென்ன நாட்கள் என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது.
சென்னை : அடுத்த ஆண்டு தொடங்க இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டில் எந்தெந்த நாட்களில் ரேஷன் கடைகள் இயங்காது என்பதற்கான விவரம் வெளியாகியுள்ளது. எனவே, எந்தெந்த தேதிகளில் ரேஷன் கடைகள் இயங்காது என்ற தேதிகளை குறித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதன்படி, வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. ஜன 26 ரிபப்ளிக் டே, பிப்ரவரி 11-ஆம் தேதி தைப்பூசம் நடைபெறவிருப்பதால் அந்த நாளிலும் ரேஷன் கடை இயங்காது. அதனைத்தொடர்ந்து, அதற்கு அடுத்த மாதம் அதாவது மார்ச் 31-ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடபடவுள்ளது.
அதைப்போல, ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு, மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம், ஆகஸ்ட் 27-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி , டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, இந்த 11 நாட்கள் ரேஷன் கடைகள் செயல்படாது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.