ரேஷன் கடைஊழியர்கள் ஊதிய உயர்வு வரவேற்கத்தக்கது- ராமதாஸ் ட்விட்..!
நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுள்ளது.
அதன்படி, ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்படும். இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250-இல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு ரூ. 7,800-ரூ. 26,000 என்று தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், கட்டுனர்களுக்கும் ரூ.1250 ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது!
— Dr S RAMADOSS (@drramadoss) February 23, 2021
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நியாயவிலைக்கடைகளின் விற்பனையாளர்களுக்கும், கட்டுனர்களுக்கும் ரூ.1250 ஊதிய உயர்வை தமிழக அரசு வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. நியாயவிலைக்கடை ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த ஓராண்டுக்குப் பிறகு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பாராட்டத்தக்கது என பதிவிட்டுள்ளார்.