வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்கள் – எச்சரிக்கும் அரசு!
இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் மக்களுக்கு ரேஷன் பொருட்களை தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து ரேஷன் கடைகள் இயங்க உறுதி செய்யப்படும் எனவும், வேலை நிறுத்தம் செய்வோருக்கு சம்பளம் பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் நிச்சயம் செய்ய வேண்டும் எனவும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் இல.சுப்பிரமணியன் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.