#BREAKING: ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடை செயல்படும் -தமிழக அரசு உத்தரவு..!

கொரோனா நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா நிவாரண நிதியுதவியாக அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000 அறிவித்துள்ளது. அதில் முதற்கட்டமாக முதல் தவணையாக ரூ.2000-க்கான டோக்கன் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக ரூ.2,000/- ரொக்கம் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட இருப்பதால் அதனைப் பெறும் ஆர்வத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாயவிலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்க குடும்ப அட்டைதாரர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு 200 டோக்கன்கள் வீதம் உரிய படிவத்தில், வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு டோக்கன்கள் 0.05.2021 முதல் 12.05.2021 ஆகிய மூன்று தினங்களில் விடுதோறும் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் மூலம் வழங்கவும்,
மேலும், இத்தொகையினை 15.05.2021 முதல் வழங்கப்பட வேண்டும் என பார்வை-3ல் கண்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 16.05.2021 அன்று நியாயவிலைக் கடைகளுக்கு ஞாயிறு விடுமுறை என்பதால் கொரோனா நிவாரணத் தொகை தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்பதால், 16.05.2021 அன்று (காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.
அந்த நாளில் நிவாரண உதவித் தொகை பெறுவதற்கான டோக்கன்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவேண்டும். இதற்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக்கடை செயல்படும் -தமிழக அரசு உத்தரவு..! pic.twitter.com/cnQ8xFLQ2S
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025