தமிழகத்தில் கொரோனோ பாதிப்புக் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலையில் அவர்களுக்கு இலவச அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் வகையிலும் தொற்று பரவுவதை தடுக்கும் வித்தத்தல் ஊரடங்கு காலங்களிலும் எவ்வித தொய்வின்றி ரேசன் பொருட்களை மக்களிடம் கடை ஊழியர்கள் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் ரேஷன் கடை ஊழியர்களை இட மாற்றம் செய்வதாகவும்,இம்மாற்ற நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்ரமணியம் வலிறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள போது தமிழக அரசு அறிவிக்கின்ற சிறப்பு திட்டங்களை எல்லாம் செயல்படுத்தும் பணியையும், கார்டுதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கும் பணியையும், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தகைய பணி நடைபெற்று கொண்டிருக்கிறது தேவை ஏற்படும் இடங்களை தவிர்த்து, மற்ற ரேஷன் கடை ஊழியர்களை இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.
மேலும் அவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்ல, லாரி உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது, ஏற்றுக்கூலி மற்றும் இறக்கும் கூலி சேர்க்கப்படுகிறது. கடையில் பொருட்கள் இறக்கும் ஒவ்வொரு முறையும் ஊழியர்களிடம் கட்டாயப்படுத்தி கூலி வசூலிப்பதாக புகார் வந்து உள்ளது. இறக்கு கூலி வசூலிப்பதை தடுத்து நிறுத்தவும் வேண்டுகோள் விடுத்து அதில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…