தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திரு. இல.சுப்பிரமணியன், அவர்கள் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், கூறப்பட்டு இருப்பதாவது, நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருள் இழப்பு, முறைகேடு மற்றும் இருப்பு அதிகம் வைத்தல் ஆகியவை தொடர்பாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பை, சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடை பணியாளரிடம் இருந்து வசூலிக்க உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பொருள் விற்பனை முனை எந்திரத்தையும், உண்மை இருப்பையும் சரிபார்க்கும்போது கூடுதல் இருப்பு காணப்பட்டால், குடும்ப அட்டைதாரருக்கு தெரியாமல் கடைப் பணியாளர் போலி பட்டியல் தயாரித்ததாகவும், பொருள் வினியோகம் செய்யும்போது எடை குறைத்து கொடுத்ததாகவும் தான் கருத வேண்டும். உணவு பாதுகாப்புக்காக அதிக மானியத்துடன் வழங்கும் அத்தியாவசிய பொருட் களை உரிய முறையில் பயனாளிகளுக்கு வழங்காததும், எடை குறைத்து விற்பது அல்லது போலிப் பட்டியல் வாயிலாக பொருட்களை திருடுவதும் தீவிர முறைகேடுகளாகும்.
இதனால்தான் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் கூடுதல் இருப்பு நேர்கிறது. எனவே, போலிப்பட்டியல் மூலம் அத்தியாவசிய பொருட்கள் திருடப்படும் குற்றம் போலவே இந்த செயலும் கருதப்பட்டு அபராதத் தொகையை தொடர்ந்து வசூலிக்க உத்தரவிடப்படுகிறது. அபராத தொகையை வட்டம் அல்லது மண்டல அலுவலர் உடனடியாக வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்த வேண்டும். போலி பட்டியலுக் கான அபராதத் தொகையை வசூலிக்க வழங்கப்பட்ட அதே நடைமுறை, பொருள் இருப்பு அதிகம் காணப்படும் இனங்களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த…