மே மாதம் போலவே ஜூன் மாதத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 3 வது முறையாக உரையாற்றினர். அப்போது, நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல் ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை தலைமைச் செயலாளர் மற்றும் பீலாராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
அப்போது, பேசிய முதல்வர் பழனிசாமி, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும் என குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் தடையின்றி தருவதால் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் மே மாதம் போலவே ஜூன் மாதத்தில் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார். இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…