தமிழகம் முழுவதும் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
தமிழகத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சகத்தின் கடுப்பாட்டில் 33,000 ரேஷன் கடைகள் நடத்தப்படுகின்றன. தற்போது, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சில மலை கிராமங்களில், 43 நகரும் ரேஷன் கடை எனப்படும் வாகனங்களின் வாயிலாக, கார்டுதாரரின் வீடுகளுக்கு அருகில் சென்று, பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.இதேபோல, தங்கள் தொகுதியிலும், நகரும் ரேஷன் கடைகளை செயல்படுத்துமாறு, எம்.எல்.ஏ.,க்கள் பலர், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அனைத்து மாவட்டங்களிலும், 3,501 நடமாடும் ரேஷன் கடைகளை துவக்க, கூட்டுறவு துறை அமைச்சகம் முடிவு செய்தது.இதற்கான அறிவிப்பை, சட்டசபையில், 110 விதியின் கீழ்,தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதம் அறிவித்தார். அத்திட்டத்திற்கு அனுமதி அளித்து, 9.66 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, ஆகஸ்ட் மாதம் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நடமாடும் ரேஷன் கடை திட்டத்தை, முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…