மாரியம்மன் கோவிலில்…!! பச்சை தண்ணீரில் விளக்கு எரியும் அதிசயம்…!!!

Default Image

ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவில், தண்ணீரில் விளக்கு எரிந்தது பக்தர்களை பரவசப்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணிர் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் விமர்சையாக திருவிழா நடக்கும்.

அதேபோல், இந்த ஆண்டு திருவிழா கடந்த ஏப்ரல் 3ம்தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தும், மாவிளக்கு படைத்தும், நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் கோயில் பூசாரி, அங்குள்ள கிணற்றில் புனிதநீராடி குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது மூலவர் மாரியம்மன் சுவாமி முன்பு சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய் முழுவதையும் வடித்து விட்டு, கிணற்றில் இருந்து கொண்டு வந்த தண்ணீரை விளக்கில் ஊற்றி பற்றவைத்தார்.

அப்போது விளக்கு திரி எண்ணெயில் எரிவது போல், தண்ணீரிலும் பிரகாசமாக எரிந்தது. இந்தஅதிசயத்தை திருவிழாவிற்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கண்டு, பக்திபரவசம் அடைந்தனர். தண்ணீரில் அதிகாலையில் பற்றவைக்கப்பட்ட இந்த விளக்கு, சுமார் ஒருமணி நேரத்துக்கு மேல் எரிந்தது. பின்னர் அணைந்தது. தண்ணீரில் விளக்கு எரியும் இந்த அதிசய திருவிழா, ஆண்டுக்கு ஒருநாள் மட்டுமே நடைபெறும்.

மற்ற நாட்களில் வழக்கம் போல் எண்ணெயைக் கொண்டுதான் விளக்கு பற்ற வைக்கப்படும். இந்த அதிசய காட்சியை பார்ப்பதற்காக, ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். இதனை கண்டு வியந்ததுடன், அம்மனையும் பக்தி பரசவத்துடன் வழிபட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்