BREAKING: ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை.! சேலத்தில் 18 பேருக்கு நெகட்டிவ்.!
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு பல முயற்சி எடுத்து வருகிறது. கொரோனா தொற்றை ரேபிட் கிட் கருவிகளை கொண்டு அரை மணிநேரத்தில் முடிவை கண்டறி ய முடியும் என்பதால் தமிழக அரசு ரேபிட் கிட் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று 24,000 ரேபிட் கிட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இதில் இருந்து இன்று 1000 ரேபிட் கிட் கருவிகளை தமிழக அரசு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
இதையெடுத்து ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக இன்று சோதனை நடத்தப்பட்டது.இந்த பரிசோதனையில் 18 பேருக்கு கொரோனா இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.ரேபிட் டெஸ்ட் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா முடிவை சேலம் அரசு மருத்துவமனை வெளியிட்டது.