தமிழகத்தில் தொடங்கியது ரேபிட் கிட் பரிசோதனைகள்.! அரை மணிநேரத்தில் ரிசல்ட்.!
தமிழகத்தில் கொரோனா தொற்றை அரை மணிநேரத்தில் கண்டறியும் ரேபிட் கிட் கருவி மூலம் கொரோனா பரிசோதனை தொடங்கியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது. மேலும், கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் ரேபிட் கிட் பரிசோதனை கருவிகளை கொண்டு அரை மணிநேரத்தில் முடிவை கண்டறியும் ரேபிட் கிட் கருவிகளை தமிழகம் ஆர்டர் செய்திருந்தது.
இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசிடம் இருந்து 24,000 ரேபிட் கிட் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. இதில், 1000 ரேபிட் கிட் கருவிகளை தமிழக அரசு சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது.
அங்கு தற்போது முதன் முதலாக ரேபிட் ஆன்டிபாடி கிட் பரிசோதனை கருவி மூலம் கொரோனா தொற்றை கண்டறியும் விரைவு பரிசோதனை தொடங்கியது. இதன் மூலம் அரை மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும்.