கல்லூரி மாணவியை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கிய வாலிபர் தற்கொலை முயற்சி.
திருச்செந்தூர் அருகே சீர்காட்சி விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் செல்வலட்சும வயது20 ஆகிறது. இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் முதலாமாண்டு படித்து வருகிறார். தந்தையை இழந்த செல்வலட்சுமி தாய் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த பரிபூரணதாஸ் என்பவரின் மகன் பீட்டர் வயது19 என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
இளம்பெண் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் காதலன் பீட்டர் அங்கு சென்று பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதன் விளைவாக கர்ப்பமடைந்த பெண்ணுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்த நிலையில் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள பீட்டர் மறுத்து விடவே தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண் திருச்செந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் பீட்டர் மீது புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த மகளிர் காவல்துறையினர் பீட்டரை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் பீட்டர் தன் உடலில் மண்ணெண்னை ஊற்றி தற்கொலைக்கு முயன்றவாறு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது உடம்பில் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் கல்லூரி மாணவியை ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்து குழந்தை பெற்றெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…
சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…