வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!

வருகின்ற 25 ஆம் தேதி பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பள்ளிகள் கல்லூரிகள் போக்குவரத்து என அனைத்துமே மூடக்கப்பட்டிருந்த நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கை குறித்து தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில மாணவர்கள் இணையதளம் மூலம் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதாக கூறியுள்ளார்.
எனவே, மாணவர்களின் நலன் கருதி வருகிற 17-ஆம் தேதி வெளியிடப்பட இருந்த தரவரிசைப் பட்டியல் வரும் 25ம் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இணைய தளத்தில் மாணவர்களின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்பதையும் மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025