தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான தரவரிசை பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ படிப்பில் சேருவதற்காக கடந்த நவம்பர் 12ஆம் தேதி வரையிலும் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதிலும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான காலி இடங்கள் உள்ளதாகவும், 2000 க்கும் அதிகமான பல் மருத்துவ படிப்புக்கான காலியிடங்கள் உள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான தமிழக மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வருகிற இரு தினங்களில் இது குறித்த கலந்தாய்வு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த வருட கல்வி ஆண்டில் 390 க்கும் அதிகமான அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தாண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.