இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்..! இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும் – கமலஹாசன்

Default Image

இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரஞ்சித்-க்கு வாழ்த்து தெரிவித்த கமலஹாசன்.

கோவையை சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார். இவரது தாய் அமிர்தவள்ளி வாய் பேசாத இயலாத, செவி திறனற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை ஆவினில் பணியாற்றி வருகிறார். ஒரே அண்ணன் மருத்துவராக உள்ளார். ரஞ்சித் குமார் அவர்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற குழந்தையாக தான் பிறந்துள்ளார்.

பிறந்த ஆறு மாதத்தில் குறையை கண்டறிந்த பெற்றோர் தனது மகனை இந்த சமூகத்தில் போட்டி போட்டு வளர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதற்காகவே, கேட்கும் திறன் அற்ற, பேசும் திறன் அற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படிப்பை கற்று பிஎட் பட்டம் பெற்ற அது சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். இதன் மூலம் தனது மகனுக்கு பயிற்சி அளிக்கலாம் என்ற நம்பிக்கையில் ஆசிரியரான அவரது தாயின் எண்ணம் வெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

காது கேளாதோர் பேச முடியாத பள்ளியில் தான் வேலை செய்த பள்ளியிலேயே தனது மகனை படிக்க வைத்த அவர் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றார். அதன் பின் பொறியியல் படிப்பையும் நிறைவு செய்தார். இதனையடுத்து,  சிவில் தேர்வுக்காக சந்தோஷ்-சபரி பயிற்சி மையத்தில் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவருக்கு, சபரிநாதன் என்ற ஆசிரியர் பயிற்சியளித்தார்.

அதில் கடின முயற்சி செய்து இரண்டாவது முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘இந்திய ஆட்சிப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார் கோவை ரஞ்சித். பேசும், கேட்கும் திறன்கள் இல்லாத சவாலை வென்ற அவர் தேர்வு வெற்றியிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார். இனி அவர் பேச்சை இந்தியா கேட்கட்டும். மனமாரப் பாராட்டுகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்