ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீது இன்று விசாரணை

ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது.அதில் ரஞ்சித்தின் முன்ஜாமின் மனு மீதான விசாரணை இன்று வரை ஒத்திவைப்பதாக தெரிவித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.மேலும் அதுவரை ரஞ்சித்தை கைது செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.இதனை அடுத்து இன்று விசாரணைக்கு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025