ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேருக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், அவர்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘நேற்று (1.8.2022) மாலை 5 மணியளவில், சோளிங்கர் – அரக்கோணம் சாலை, SR கண்டிகை மின்னலம்மாள் கோவில் எதிரே சாலையோரம் நின்றிருந்த புதூர் கண்டிகையைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 45) மற்றும் அங்கு சாலையில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த SR கண்டிகை கிராமத்தை சேர்ந்த உண்ணாமலை (வயது 45), கன்னியப்பன் (வயது 65) ஆகியோர் மீது அவ்வழியாக சென்ற கார் எதிர்பாராத விதமாக மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கும் தலா ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…