பொறியியல் படிப்பில் சேர மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு வெளியிடவுள்ளார்.
பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கி இந்த மாதம் 16-ஆம் தேதி முடிவடைந்தது. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1லட்சத்து 60 ஆயிரத்து 834மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளதாகவும் , அதில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 436 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் விண்ணப்ப கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நேற்றைய முன்தினம் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் விண்ணப்பம் கட்டணம் செலுத்தி சான்றிதழ் பதிவேற்றம் செய்த மாணவ மாணவிகளுக்கான ரேண்டம் எண்ணை உயர் கல்வித்துறை அமைச்சரான கே. பி. அன்பழகன் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைந்த பயிலரங்க வளாகத்தில் வைத்து இன்று மாலை 4 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்டம் வரை தமிழக கடற்கரையோர எல்லை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலத்திற்காக…
ஹைதராபாத் : நேற்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் நாடுமுழுவதும் அம்பேத்கர் ஜெயந்தியாக கொண்டாடப்பட்டது. நேற்றைய தினத்தில் தெலங்கானாவில்…
ஜெய்ப்பூர் : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், M.S.தோனி தலைமையிலான சென்னை…