தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை
தமிழகத்தின் 36 வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை.
தமிழகத்தில் மிகப்பெரிய மாவட்டமாக இருந்த வேலூர் திருப்பத்தூர் , ராணிப்பேட்டை என்று இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.இதனால் திருப்பத்தூர் ,ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக உருவாக்கப்படுவதற்கான அரசாணை வெளியிட்டப்பட்டது.
இன்று முதலாவதாக திருப்பத்தூர் மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.இதற்கு பின் ராணிப்பேட்டையில் உள்ள மாவட்ட கால்நடை நோய் தடுப்பு மருத்துவ நிலைய வளாகத்தில் தொடக்க விழா நடைபெற்றது.தொடக்க விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு ராணிப்பேட்டையை புதிய மாவட்டமாக தொடங்கி வைத்தார்.இந்த விழாவில் விழாவில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை வருவாய் கோட்டங்கள் :
- ராணிப்பேட்டை
- அரக்கோணம்
ராணிப்பேட்டை தாலுகாக்கள்:
- ஆற்காடு
- நெமிலி
- அரக்கோணம்
- வாலாஜா