பாவங்களை கழுவும் ராமேஸ்வரம்………ராமநாதசுவாமி…….கோவிலுக்குள் புகுந்த கழிவுநீர்…….அறநிலைய துறையின் அவலம்….!!!

Published by
kavitha

இதிகாசமான இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அந்த அளவுக்கு பழமையானது இராமேஸ்வரம் என்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக  கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும்.
Image result for ramanathaswamy
இராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதுமான இந்த நிகழ்வு ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக புரணாங்களால் கருதப்படுகிறது.
இந்நிலையில் இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு மிக உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வர தலமும் முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம்.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர்.
அவை வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார் என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

மேலும் சீதையால் மணலினால் செய்யப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராணங்கள் வழிகாட்டுகிறது.
அதற்கும் முதற்படியாக இராமனால் சிவலிங்கம் ஸ்தாபித்து சிவத்தை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகும்.

இத்தைய பெருமை வாய்ந்த இராமேஸ்வரம் இராமநாதசுவாமி ஆலயத்திற்குள் மழைநீருடன் கலந்த கழிவுநீர் புகுந்ததால் ஆலயம் அசுத்தமானது மட்டுமல்லாமல் பக்தர்களும் அவதியடைந்தனர்.

இந்நிலையில் இராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலையிலிருந்தே நல்ல கனமழை பெய்தது. இதன் காரணமாக இராமநாதசுவாமி கோயிலில் உள்ள மூன்றாம் பிரகாரம் மற்றும் அம்பாள் சன்னதி மேலும் தங்க கொடிமரம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து கோவிலுக்குள் புகுந்தது.இந்த கழிவுநீர் காரணமாக கோவிலுக்குள் துர்நாற்றம் வீசியதோடு  நடக்கக் கூட முடியாமல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்தனர்.
கழிவுநீர் கலக்கும் வரையில் கோவிலை கண்டுகொள்ளாமல் இராமேஸ்வரம் கோயில் நிர்வாகம் இருந்துள்ளது.மேலும் முறையாக நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும், அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கோவிலுக்குள் செல்லாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக்காலக்கட்டத்தில் இத்தகைய கோவில்களை பார்ப்பதே கடினம் ஆனால் நமக்கு அதை பராமரிக்கும் பொறுப்பு கிடைத்திருந்தும் அதனை அலட்சியம் செய்து இப்படி பொறுப்பில்லாமல் இருக்கவா அரசு அறநிலைய துறையை அமைத்துள்ளது. அலட்சியம் செய்யும் அறநிலையதுறை எதற்கு என்று மக்கள் கேள்வி கனைகளை தொடுக்கின்றனர்.பாதுகாக்கவும் முடியவில்லை…..பரமாரிக்கவும் முடியவில்லை…சிலைகளை காக்கவும் முடியவில்லை..இந்த கையாளகதா அறநிலையதுறையால்…..அறநிலையதுறையின் மேல் குற்றச்சாட்டை மக்கள் அடுக்குகிறார்கள்.
DINASUVADU
 

Published by
kavitha

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago