ராமேஸ்வரம்:இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து,சில மணி நேரங்களே ஆன நிலையில்,மேலும் 12 மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து,55 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு வலியுறுத்தினார்.
இதனையடுத்து,சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் பகுதி மாணவர்கள் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில்,இலங்கை கடற்படையினாரால் சிறைபிடிக்கப்பட்ட 55 மீனவர்களை விடுதலை செய்யக் கோரி மத்திய,மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் சங்கம் முன்னதாக அறிவித்துள்ளது.
அவ்வாறு,டிச.31 ஆம் தேதிக்குள் விடுவிக்காத பட்சத்தில் ஜனவரி 1 ஆம் தேதி ராமேஸ்வரம் – சென்னை விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை தங்கச்சிமடம் பகுதியில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடைபெறும் என்றும் மீனவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த போராட்டத்தில் மண்டபம் பகுதி மீனவர்களும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,மீண்டும் இலங்கை கடற்படையானது நேற்று முன்தினம் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேரை சிறைபிடித்து சென்றது. இதன்காரணமாக,எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 68 மீனவர்களை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று கடிதம் எழுதினார்.அந்த கடிதத்தில்,இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களையும், 75 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…
சென்னை : இன்றயை காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக யூடியூப் உள்ளது. இதில் பொழுதுபோக்குக்காகவும், சில முக்கிய…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…