ராமேஸ்வரம் மீனவர்கள் ‘1000 பேரை’ எச்சரித்த இலங்கை கடற்படையினர்.!

- ராமேஸ்வரம் மீனவர்கள் 1000 பேர் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர்.
- எல்லை தாண்டி மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், உடனடியாக திரும்பிச் செல்லுமாறும் எச்சரிக்கை.
ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரம் மீனவர்கள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையையொட்டி உள்ள கடல் பகுதியில் அதிகாலை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், இது சர்வதேச கடல் எல்லை, எனவே மீன்பிடிக்க அனுமதி இல்லை, உடனே இங்கிருந்து செல்லுங்கள் என மிரட்டும் விதத்தில் மீனவர்களை எச்சரித்தனர். மேலும் சில கடற்படை வீரர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர்.
இந்நிலையில், தொடர்ந்து இந்தப் பகுதியில் மீன்பிடித்தால் சிறை பிடிக்கப்படுவீர்கள் என எச்சரித்த கடற்படையினர், மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். உயிர்பிழைத்தால் போதும் என நினைத்த மீனவர்கள் அவசரமாக கரை திரும்பினர். கடந்த 2 வாரத்தில் மட்டும் ராமேஸ்வரம் மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் 2-வது முறையாக தாக்கி விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025