“விடுதலை செய்., விடுதலை செய்” பாம்பன் பாலத்தை முற்றுகையிட்ட மீனவர்கள்.!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் ஏராளமான மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Rameshwaram Fisherman Protest

ராமேஸ்வரம் : தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த கைது நடவடிக்கை அண்மை காலமாக தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அதிகபட்ச அபராதம் , மீனவர்களுக்கு நீதிமன்ற காவல், படகுகள் அரசுடைமையாக்கப்படுவது என தொடர்ந்து இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இப்படியான சூழலில், நேற்று 23 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து வந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த கைது சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், முன்பு கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்படும்போது படகுகளும் விடுவிக்கப்படும். ஆனால்,  தற்போது படகுகள் தொடர்ந்து அரசுடைமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வெகுவாக பாதிக்கப்படுகிறது எனக் கூறி இன்று ராமேஸ்வரம் பாம்பன் பகுதியில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விசைப்படகு மீனவர்கள், நாட்டுப்படகு மீனவர்கள் என பலரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதனால் அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “விடுதலை செய் விடுதலை செய் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய் , திருப்பி கொடு திருப்பி கொடு மீனவர்களின் படகுகளை திருப்பி கொடு ” என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மீனவர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்