இனி பெட்ரோல் விலை.ரூ 20, டீசல் விலை.ரூ 24-க்கு விற்பனை… வரும் 27ஆம் தேதி முதல் விற்பனை..

Default Image

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்க்கு  அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் ராமர் பிள்ளை. இவர் உலக வங்கி, ஐநா சபை, மத்திய அரசின் கூட்டு திட்டம் முதலியவற்றில் தனது மூலிகை பெட்ரோலை பதிவு செய்துள்ளார். இவர், கடந்த ஜனவரி 29 ஆம் தேதி முதல் மூலிகைப் பெட்ரோல் விற்பனையை தொடங்கியுள்ளார். இதற்க்காக தென்காசி, விருதுநகர், தேனி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட விற்பனை முகவர்களை அறிமுகப்படுத்தும் விழா ராஜபாளையத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ராமர் பிள்ளை  பேசுகையில் வரும், பிப்ரவரி 27-ஆம் தேதி வியாழக்கிழமை  முதல் மூலிகை பெட்ரோல் நேரடியாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Image result for மூலிகை பெட்ரோல்

ஒரு லிட்டர் ரூ 30-க்கு என அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கன்னியாகுமரி- நாகர்கோவில் இடையே உள்ள பகுதியில் ஒரு நாளைக்கு  15 ஆயிரம் லிட்டர் மூலிகைப் பெட்ரோல் தயாரிக்கும் வகையில் தொழிற்சாலை தயாராகவுள்ளது என்றும், கழிவு நீரிலிருந்து தயாரிக்கப்படும் இந்த மாற்று எரிப்பொருளை தயாரிக்க எந்தவிதமான தடையும் விதிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றும், அந்த உத்தரவை தற்போது செயல்படுத்தி வருகிறோம். மார்ச் இறுதிக்குள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இதற்காக  உலக  அளவில், காப்புரிமை பெறுவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது. நான் நேரடியாக விற்பனை செய்யும் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 20, டீசல் ரூ 24-க்கு விற்பனை செய்யவுள்ளேன் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்