சொட்டு சொட்டாக வரும் நீரை இரவு முழுக்க சேகரிக்கும் அவலம்! தமிழ்நாட்டில் எங்கு?
பெரும்பாலான ஊர்களில் கோடை காலம் வந்தால்தான் தண்ணீரின் அருமை தெரிகிறது. தண்ணீர் சிக்கனம் அளவாக பயன்படுத்த கூறுகிறோம். ஆனால் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக தண்ணீருக்கு கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திருத்தேர்வலசை கிராம மக்கள்.
இவர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஐந்தாண்டுக்கு மேலாக இருந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக நீர்த்தேக்க தொட்டிஇருந்தும் எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது. இதனால் தினம் தினம் மக்கள் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள்.
இன்னும் சொல்லப்போனால் காவிரி குடிநீர் திட்ட குழாயில் இருந்து கசியும் தண்ணீரை ஒரு இரவு முழுக்க இருந்து பிடித்து அதனை உபயோகப்படுத்தி வருகின்றனர். இதுபற்றி பஞ்சயாத்து அதிகாரியிடம் கிராம மக்கள் சார்பாக கேட்டபோது, ஓடக்கரை சுற்றியுள்ள கிராமத்திற்கு குடிநீர் வழங்க திட்டம் போடப்பட்டுள்ளதாகவும் விரைவில் இது நிறைவேற்றப்படும் எனவும் கூறுகிறார்.
DINASUVADU