ஒரு குடம் தண்ணீர் ரூ.15க்கு விற்கப்படுவதால், ராமநாதபுரம் கிராம மக்கள் தவிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மாயாகுளம் ஊராட்சியில் சின்னமாயாகுளம், திருவள்ளுவர் நகர், டாக்டர் அம்பேத்கர் நகர், விவேகானந்தபுரம், பாரதி நகர், முத்துராஜ் நகர், ரோஜா நகர் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன.
இவர்களின் குடிநீர் தேவைக்காக 3 மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக, தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவது இல்லை.
இதனால் தனியார் வண்டிகள் மூலம் ஒரு குடம் ரூ.15க்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த விலை கொடுத்து நீரை வாங்க முடியாமல், அப்பகுதி மக்கள் சிரமத்தில் உள்ளனர்.
இதுதொடர்பாக ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…