ரமலான் பண்டிகை : தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை முதல் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான பண்டிகை பிறை தெரிந்ததால் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமை காஜி தெரிவித்தார்.இதனால் அரசியல் கட்சி தலைவர்கள்,பிரபலங்கள் அனைவரும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை முதலே சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.