ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14க்கு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 13 ரவுடிகளை பாலிகிராம் சோதனை செய்ய அனுமதி கோரிய வழக்கில் திருச்சி நீதிமன்றத்தில் 12 பேர் ஆஜரானார்கள்.  பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, அடுத்ததாக, மீண்டும் 11 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.

இதற்காக சம்பந்தப்பட்ட 11 பேர் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்காக சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், பாலிகிராம் சோதனையில் என்ன கேள்வி கேட்க போகிறார்கள் என்பதை ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என ரவுடி தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை நவ.14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் – தேதி அறிவிப்பு!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…

22 mins ago

அமெரிக்க அதிபர் தேர்தல் தொடக்கம்! புதிய அதிபர் டிரம்பா? கமலா ஹாரிஸா?

அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…

1 hour ago

இது நம்ம லிஸ்ட்லயே இல்ல! ரிஷப் பண்டுக்கு கொக்கி போடும் பஞ்சாப்!

மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…

1 hour ago

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ?

இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…

2 hours ago

2036 ஒலிம்பிக்.. இந்தியாவில் நடத்த IOA விருப்பம்!

டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…

2 hours ago

“முகுந்த் வரதராஜன் பிராமணர்னு காட்ட துப்பில்ல”…ஆவேசமாக பேசிய மதுவந்தி!

சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…

2 hours ago