அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! விசாரணை விவரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.!
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் விசாரணை குழுவின் தற்போதையை நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் மர்ம கும்பலால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், உயிரிழந்த ராமஜெயம் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையின் பெயரில் இந்த வழக்கு விசாரணை தமிழக காவல்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணை அறிக்கைகள் திருச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணை அறிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை நிலை குறித்த தகவல்களை சிறப்பு புலனாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.