ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

இருவருக்கும் இடையே இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.அருள்  இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார்.

anbumani and ramadoss

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தின் போது ராமதாஸ் புது இளைஞரணித் தலைவர் பொறுப்பு  தனது மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

இதனை ஏற்றுக்கொள்ள முடியாத அன்புமணி அவர் கட்சியில் சேர்த்து 4 மாதங்கள் தான் இருக்கும். எனவே, அவருக்கு என்ன அனுபவம் இருக்கிறது? வேறு அனுபவம் வாய்ந்தவர்களுக்கு இந்த பதவியை கொடுக்கலாமே” என கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பான  ராமதாஸ் ” கட்சியை நிறுவியது நான் தான். நான் சொல்வதை தான் கேட்கவேண்டும். ஏனென்றால், இது நான் உருவாக்கிய கட்சி. இப்போது மீண்டும் சொல்கிறேன். இளைஞரணித் தலைவர் பொறுப்பு முகுந்தனுக்கு தான்” என கூறினார்.

ராமதாஸ் இப்படி கூறியவுடன் கோபத்தில் அன்புமணி கையில் வைத்திருந்த மைக்கை கோபத்துடன் சரி..சரி என்று தலையை அசைத்துக்கொண்டு கீழே வைத்தார். அதன்பிறகு எழுந்து பனையூரில் தனக்கு தனி அலுவலகம் இருக்கிறது. இனிமேல் தொண்டர்கள் அனைவரும் அங்கு வந்து என்னை பாருங்கள்” என அறிவித்துவிட்டு கோபத்துடன் சென்றார்.

திடீரென கட்சியில் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ள காரணத்தால் யார் பக்கம் செல்லலாம் என நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.அருள்  இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” ராமதாஸ்- அன்புமணி இடையே கருத்து வேறுபாடு எதுவும் இல்லை. பேசிக்கொண்டிருந்த போது திடீரென இப்படி வார்த்தை மோதல் வெளிப்பட்டது சலசலப்புதான். இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை இன்றைக்குள் எல்லாம் சரியாகிவிடும்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்