ரூ.17.66க்கு விற்கிறது ஆனால் 4மடங்கு உயர்த்தி ரூ.73.28க்கு விற்கிறேங்கேளே!? நியாயமா?
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.17.66 ஆக இருக்கும்போது ரூ.73.28க்கு விற்பனை செய்வது நியாயமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பெட்ரோல்-டீசல் விலை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜனவரி 1ந் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 61.13 டாலர் என்ற நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.35.65. இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் இதிலே அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகிய எல்லாவற்றுடன் தமிழக அரசின் 32.11 சதவீதம் விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர் தான் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.17.66 மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11 சதவீதம் விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37 க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் தற்போது ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. அநியாயமாகும். இது கண்டிக்கத்தக்கது.
அதேபோல, ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவு ரூ.19.10 மட்டுமே. அதன்னோடு மத்திய கலால் வரி ரூ.15.83, விற்பனையாளர் கமிஷன் ரூ.2.47 மற்றும் மாநில அரசின் 24.04 விழுக்காடு விற்பனை வரி ரூ.8.99 சேர்த்தால் 1 லிட்டர் டீசல் ரூ.46.39க்கு விற்பனை செய்ய வேண்டும்.
ஆனால், இதைவிட ரூ.21.20 கூடுதலாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.17.66 மட்டுமே ஆனால், இதைவிட 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.இது கண்டிக்கதக்கது இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.