சுரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுனருமான முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் செய்ததாக புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக அவர் மீது புகார்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது.எனவே சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்தது தமிழக அரசு.மேலும் மூன்று மாதங்களில் இந்த விசாரணைக்குழு அறிக்கை அளிக்கவும் அரசு உத்தரவிட்டது.சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்க விசாரணை ஆணைய நீதிபதி கலையரசன் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், ஊழல், அதிகார அத்துமீறல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணையை எதிர்கொண்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவுக்கு பணி நீட்டிப்பு வழங்க பல்கலைக்கழக வேந்தரும், ஆளுனருமான பன்வாரிலால் புரோகித் முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிகளை காலில் போட்டு மிதித்து விட்டு, புகார்களுக்குள்ளான துணைவேந்தருக்கு பணிநீட்டிப்பு வழங்கத்துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…